Mbps மற்றும் MBpsக்கு இடையில் இருக்கும் வேறுபாடு என்ன?
Thursday, Jul 07, 2022 · 10 mins
770
Mbps (வினாடிக்கு மெகாபிட்) மற்றும் MBps (வினாடிக்கு மெகாபைட்) ஆகியவை எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் அவை ஃபைல் டவுன்லோடு மற்றும் வேகத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாம் இப்போது அறிந்து கொள்ளலாம். இணையத்தைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அதற்கு அவர் சில வார்த்தைகள் மற்றும் சுருக்கங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல் வேண்டும். அந்த வகையில், Mbps மற்றும் MBps ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமானது என்றும் சொல்லலாம். அப்படி இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? இது சற்று முக்கியமற்றதாகத் தோன்றினாலும், இவ்விரண்டில் இரண்டாவதாக உள்ள ஆங்கில எழுத்து "B" தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பைதைக் காணலாம்.
Mbps மற்றும் MBps இடையே உள்ள வேறுபாடு என்ன?
பிட்ஸ் vs. பைட்ஸ் என்பது இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு. முதல்குறுஞ்சொல், Mbps, ஒரு வினாடிக்கான மெகாபிட்களை, சிறிய ஆங்கில எழுத்து "b" மூலம் குறிக்கிறது, இரண்டாவது, MBps, பெரிய (கேப்பிட்டல்) ஆங்கில எழுத்து "B" மூலம் ஒரு வினாடிக்கான மெகாபைட்களைக் குறிக்கிறது.
Mbps (வினாடிக்கான மெகாபிட்ஸ்) என்பது டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்திற்கான அளவீட்டு அலகு ஆகும்.
MBps (வினாடிக்கு மெகாபைட்ஸ்) என்பது மற்றொரு அளவீட்டு அலகு ஆகும். ஆனால், இது பொதுவாக ஒரு ஃபைல் டவுன்லோடு அல்லது அப்லோடு செய்யப்படும் வேகத்தை விவரிக்கப் பயன்படுகிறது.
Mbps மற்றும் MBps ஆன்லைன் செயல்பாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன?
முன்பு கூறியது போல், இணையத்தில் ஏதேனும் ஒன்றை அப்லோடு செய்யும்போது, இணையதளம் லோடு ஆவது முதல் பாடல்கள் மற்றும் திரைப்படங்களை டவுன்லோடு செய்வது வரை, Mbps மற்றும் MBps ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஃபைல் டவுன்லோடு ஆக எடுக்கும் நேரம், அதன் அளவு மற்றும் உங்கள் இணைய இணைப்பு எவ்வளவு வேகமானது என்பதைப் பொறுத்து அமையும். நீங்கள் ஈத்தர்நெட் கேபிள் அல்லது வைஃபை வழியாக டவுன்லோடு செய்கிறீர்களா என்பது போன்ற பிற மாறிகள் டவுன்லோடு செய்வதற்கான நேரத்தை பாதிக்கலாம். உங்களிடம் ஏற்கனவே அதிக Mbps இணைப்பு இருந்தும், மோசமான இணைய இணைப்பு இருந்தால் என்ன செய்வது? உங்களிடம் நல்ல டவுன்லோடு வேகம் இருந்தும்கூட, கேமிங் அல்லது வீடியோ சாட் (chat) போன்ற விஷயங்களில் சிக்கல் ஏற்பட்டால், அதற்கு அலைவரிசை அல்லது லேடன்சி தான் காரணமாக இருக்கலாம்.
வெவ்வேறு வேகங்களில், பின்வரும் மீடியா வகைகளை டவுன்லோடு செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதற்கான மதிப்பீடு இதோ:
மீடியா | இணைய பக்கம் | MP3 பாடல் | 10 நிமிட SD வீடியோ கிளிப் | SD திரைப்படம் | HD திரைப்படம் |
ஃபைல் அளவு | 1 MB | 3 MB | 500 MB | 2 GB | 12 GB |
1 Mbps | 8 வினாடிகள் | 25 வினாடிகள் | 1 மணி நேரம், 10 நிமிடங்கள் | 4 மணி நேரம், 46 நிமிடங்கள் | 28 மணி நேரம், 38 நிமிடங்கள் |
3 Mbps | 2 வினாடிகள் | 8 வினாடிகள் | 23 நிமிடங்கள், 18 வினாடிகள் | 1 மணி நேரம், 35 நிமிடங்கள் | 9 மணி நேரம், 32 நிமிடங்கள் |
5 Mbps | 1 வினாடி | 5 வினாடிகள் | 14 நிமிடங்கள் | 57 நிமிடங்கள், 15 வினாடிகள் | 5 மணி நேரம், 43 நிமிடங்கள் |
10 Mbps | <1 வினாடி | 2 வினாடிகள் | 7 நிமிடங்கள் | 28 நிமிடங்கள், 37 வினாடிகள் | 2 மணி நேரம், 52 நிமிடங்கள் |
30 Mbps | <1 வினாடி | <1 வினாடி | 2 நிமிடங்கள், 19 வினாடிகள் | 9 நிமிடங்கள், 32 வினாடிகள் | 57 நிமிடங்கள், 15 வினாடிகள் |
50 Mbps | <1 வினாடி | <1 வினாடி | 1 நிமிடம், 23 வினாடிகள் | 5 நிமிடங்கள், 43 வினாடிகள் | 34 நிமிடங்கள், 21 வினாடிகள் |
100 Mbps | <1 வினாடி | <1 வினாடி | 41 வினாடிகள் | 2 நிமிடங்கள், 51 வினாடிகள் | 17 நிமிடங்கள், 10 வினாடிகள் |
500 Mbps | <1 வினாடி | <1 வினாடி | 8 வினாடிகள் | 34 வினாடிகள் | 3 நிமிடங்கள், 26 வினாடிகள் |
1 Gbps | <1 வினாடி | <1 வினாடி | 4 வினாடிகள் | 17 வினாடிகள் | 1 நிமிடம், 43 வினாடிகள் |
Be Part Of Our Network
All Categories
- BUSINESS INTERNET
- Router
- Internet Security
- Wi-Fi Connection
- Wi-Fi Network
- Internet Broadband
- smartfiber
- Internet Speed
- TV Streaming
- Wifi Connection
- BEST BROADBAND PLANS
- BROADBAND PLANS | 5GHz
- 2.4GHz
- 5GHz frequency
- 5GHz WiFi frequency
- 2.4GHz frequency
- LDRs
- LONG DISTANCE RELATIONSHIP
- ACT Fibernet
- wifi as a service
RECENT ARTICLES
Find the perfect internet plan for you!